ஜன நாயகனுக்காக வெயிட்டிங்!.. கூலி ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ வருது தெரியுமா?.. தரமான அப்டேட் இதோ!..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படமான கூலி திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின் அப்டேட்டை இன்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சன் பிகசர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கணகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சவுபின் ஷாஹிர், ஜூனியர் எம்ஜிஆர், ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெஸ்ஸி, காளி வெங்கட் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையில் அதிரடி த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.


மேலும், இப்படத்திற்காக ரஜினிகாந்த் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு வித்தியாசமான சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளதாகவும், ரஜினியின் ’ரங்கா’ பட வசனம் ஒன்றும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் ’விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்படத்திலும் மாஸ் மற்றும் கதை அம்சங்கள் கலந்த படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கூலி படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், தெலுங்கு இயக்குனர் விவேக் ஆத்ரேயாவுடன் ரஜினிகாந்த் புதிய படம் ஒன்றில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்தின் வேட்டையன் படம் பாக்ஸ் ஆஃபிஸில் சுமாரான வெற்றியை பெற்றது, ஆனால் "கூலி" மற்றும் "ஜெயிலர் 2" படங்கள் மூலம் மீண்டும் பெரிய அளவில் வெற்றியை பெருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வரப்போகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.