‘தக் லைஃப்’ மிகச் சிறந்த படம், ஏனெனில்... - ஜேம்ஸ் வசந்தன் விவரிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, நாசர், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தக் லைஃப்’. இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. பலரும் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை விமர்சன ரீதியில் வெகுவாக சாடினர். இதனிடையே, ‘தக் லைஃப்’ பார்த்துவிட்டு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

‘தக் லைஃப்’ தொடர்பாக ஜேம்ஸ் வசந்தன் கூறும்போது, “‘தக் லைஃப்’ படம் பார்த்தேன். அசந்துவிட்டேன். நல்ல படம். மிக நல்ல படம். ஆனால், ஏன் இதை சிலர் மோசமாக விமர்சித்தார்கள் என்பது எனக்கு கொஞ்சம்கூட விளங்கவில்லை. ஒரு அண்டர்வேர்ல்டு கேங்ஸ்டர் படத்துக்குத் தேவையான எல்லாமும் சரியான விகிதத்தில் இருந்தது. இதுவே ஆங்கில மொழியில் ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருந்தால் ரசித்துப் பாராட்டியிருப்போம். அல்லது, ரசித்தது போல நடித்திருப்போம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.