‘தேவையற்ற இன்ஸ்ட்ரக்ஷன்’ - சத நாயகன் ரிஷப் பந்த் அவுட் குறித்து தினேஷ் கார்த்திக் ‘பாயின்ட்’
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இந்திய அணி அருமையாகத் தொடங்கியது. முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் இங்கிலாந்து செய்வதறியாது விழி பிதுங்கியது. ஆனால், ஷுப்மன் கில் (147), கருண் நாயர் (0) ஆட்டமிழந்த பிறகு செட்டில் ஆன ரிஷப் பந்த்துக்கு உள்ளிருந்து ‘மெசேஜ்’ வந்தது. இதனையடுத்து அவர் தடுப்பாட்டத்துக்குச் சென்றதால் ஆட்டமிழந்தார்.
359/3 என்று தொடங்கிய இந்திய அணி, கடைசியாக ஷர்துல் தாக்கூர் 1 ரன்னில் ஆட்டமிழக்க, 454/7 என்று ஆனது. இதனால் 550 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்து இங்கிலாந்தை விட்டு ஆட்டிப்படைக்கும் வாய்ப்பு கொஞ்சம் பின்னடைவு கண்டது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில், 113 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 471 ரன்கள் குவித்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


