Vijay: விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் : காத்திருக்கும் ஜனநாயகன் கொண்டாட்டங்கள்; மறுபக்கம் ரீ-ரிலீஸ்!

மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்களும், கட்சி தொண்டர்களும். நாளை மறுநாள் விஜய்யின் 51 வது பிறந்த நாள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஜனநாயகன் படத்தின் அப்டேட் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

விஜய்யின் 69வது படமான ஜனநாயகன், அவரது சினிமா பயணத்தின் கடைசி படமாக சொல்லபடுகிறது. அஜித்தின் துணிவு படத்தை இயக்கிய ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யின் ஜோடியாக பூஜா ஹெக்டே, வில்லனாக பாபி தியோல், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ, வரலட்சுமி, ரேவதி, நரேன், பிரியாமணி, ஸ்ருதி ஹாசன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் உள்ளனர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு, அனிருத் இசை, அனல் அரசு ஆக்‌ஷன் என அசத்தலான கூட்டணியுடன் படம் ரெடியாகி வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.

ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்

ஜன நாயகனின் முதல் அறிவிப்பு போஸ்டரின் போது The Torch bearer of Democracy is arriving என்ற வரிகளுடன் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. ஜனநாயகத்திற்கான தீப்பந்தத்தை ஏற்றுவதற்கான கதை இது அனலை கிளப்பியிருந்தாலும், எல்லாருக்கும் பிடிக்கும்படியான விஜய் படமாக இந்தப் படம் இருக்கும் என்று சொல்லியிருந்தார் இயக்குநர் வினோத். சமீபத்தில் தன்னுடைய போர்ஷன் முழுவதையும் முடித்துக் கொடுத்துவிட்டார் விஜய்.

பூஜா ஹெக்டேவுடன் விஜய்

இந்நிலையில் படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியாகும் என்ற செய்திகள் பரவி வருகிறது. அதே சமயம், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இன்றே அசத்தலான அப்டேட் காத்திருக்கிறது. கொண்டாட்டம் இன்றிருந்து தொடங்குகிறது. அதே சமயம் நாளையும் ஒரு அப்டேட் வரும் என்கிறார்கள். இந்த கிளிம்ஸ் வீடியோவிற்கு அனிருத் இசையமைத்து கொடுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.

பனையூரில் விஜய்
பனையூரில் விஜய்

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சி தொண்டர்கள் விலையில்லா விருந்து என்ற காலை உணவு திட்டத்தை மத்திய சென்னையான வில்லிவாக்கத்தில் இருந்து தொடங்கி வைக்கின்றனர். இப்போது முழு அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய், வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தமிழக முழுவதும் பிரசாரம், பயணம் என கட்சியை வலுப்படுத்தும் வேலைகளில் இறங்குகிறார் என்றும் தகவல்.

இதற்கிடையே படத்தின் டீசர் அல்லது சிங்கிள் ஒன்று வரும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். தவிர, பிறந்தநாள் ஸ்பெஷலாக அட்லி இயக்கிய மெர்சல் படமும் இன்று ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.