Love Marriage: விளம்பரத்திற்காக மிஷ்கினை பாட வைக்கல! - ஷான் ரோல்டன் ஓப்பன் டாக்

வி க்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கிற லவ் மேரேஜ் திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஷண்முக ப்ரியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ஷான் ரோல்டன்

விக்ரம் பிரபு, ஷான் ரோல்டன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.

மிஷ்கினைப் பாட வைத்தது பற்றி பேசுகையில், "மிஷ்கின் சாருக்கு நல்ல மியூசிக் சென்ஸ் இருக்கு. சங்கீத கலாநிதி சஞ்ஜய் சுப்ரமணியம் சார்தான் என்னுடைய குருநாதர். அவரும் மிஷ்கின் சாரும் ரொம்பவே க்ளோஸாகப் பழகுவாங்க.

ரெண்டு பேரும் இசை பத்தியும், இலக்கியம் பத்தியும் நிறைய விஷயங்கள் பேசுவாங்க. ஒரு பஞ்சு மாதிரி மிஷ்கின் சார் அனைத்து விஷயங்களையும் எடுத்துப்பாரு. ஒரு சூப் சாங்கை அவரைப் பாட வைக்கிறோம்னு எனக்கு முதல்ல தயக்கமாக இருந்தது.

மிஷ்கின்
மிஷ்கின்

ஆனா, அவர் மியூசிக்கலாகப் பாடல் நல்லா இருக்குனு சொன்னாரு. அவர் சிறந்த பாடகரும்கூட. அவர் பாடியிருக்கிற இன்னொரு பாடலையும் நான் கேட்டேன். அந்தப் பாடலும் அருமையாக இருந்தது.

அவர் மியூசிக் படிச்சிட்டு இருக்கார்னு கேள்விப்பட்டிருக்கேன். இசைக் கலைஞராகதான் அவரைப் பாடக் கூப்பிட்டேன். விளம்பரத்திற்காக அவரைப் பாட வைக்கல." எனப் பேசினார்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.