ENG vs IND: `கோலியுடன் விளையாடாதது வருத்தமே.. - இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது.

விராட் கோலி

முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன்20) ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி விளையாட உள்ள முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடர் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இந்தத் தொடரில் கோலி இல்லாதது வருத்தமே என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருக்கிறார். விராட் கோலி குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், “இந்திய டெஸ்ட் அணி வரும் போட்டிகளில் தவறவிடப்போவது விராட்டின் போராட்டக் குணத்தை தான்.

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்

விராட் டெஸ்ட் ஓய்வை அறிவித்தப்பின், ‘உங்களுக்கு எதிராக விளையாட முடியாதது என்பது எனக்கு வருத்தம் தான்’ என்று மெசேஜ் செய்திருந்தேன். அந்த அளவுக்கு அவருக்கு எதிராக விளையாடுவதை நான் விரும்புவேன். நானும் அவரும் களத்தில் போர்குண மனநிலைக் கொண்வர்கள்” என்று கோலி குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.