வெற்றிமாறன் - சிம்பு படத்தில் நெல்சனுக்கு என்ன வேலை?!.. விஜய் சேதுபதி இப்டிதான் சிக்கினாரு!...
Simbu Nelson: விஜய் டிவியில் பல வருடங்கள் பல நிகழ்ச்சிகளை இயக்கியவர் நெல்சன். சிம்புவை வைத்து கெட்டவன் என்கிற படத்தை இயக்கினார். சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் மீண்டும் விஜய் டிவிக்கே வேலைக்கு போனார். பின்னர் கோலமாவு கோகிலா மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.
நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் நடித்திருந்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, கோலிவுட்டில் இயக்குனராக வெற்றி பெற்றார் நெல்சன். அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படமெடுத்தார். டார்க் ஹியூமர் என்கிற கான்செப்ட்டை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தவரே நெல்சன்தான். டாக்டர் படத்தில் அது நன்றாகவே வொர்க் ஆவுட் ஆகியிருந்தது.
இந்த படம் ஹிட் அடித்து 100 கோடி வரை செய்தது. அதன்பின் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும், அவரை நம்பி நடிக்க முன் வந்தார் ரஜினி. அப்படி உருவான படம்தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து 600 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
இப்போது மீண்டும் ரஜினியை வைத்து ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார் நெல்சன. படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்தின் டெஸ்ட் ஷூட்டில் சிம்புவின் அருகே நெல்சன் நிற்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.
இந்த படத்தில் நெல்சனுக்கு என்ன வேலை? இந்த படத்தில் அவர் நடிக்கிறாரா? என பல கேள்விகள் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. தற்போது அதற்கான பதில் தெரிந்திருக்கிறது. இந்த படத்தில் நெல்சன் இயக்குனராகவே சில காட்சிகளில் நடிக்கவிருக்கிறாராம், அதுவும் டெஸ்ட் ஷூட்டில் மட்டுமே அவர் நடிப்பார். பின்னாளில் படத்திற்கு தேவைப்பட்டால் அவரை வெற்றிமாறன் நடிக்க வைப்பார் என்கிறார்கள்.
விடுதலை படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதியை அழைத்தபோது ‘வெறும் 8 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்தால் போதும்’ என கேட்டார் வெற்றிமாறன். ஆனால், அவரை வைத்து மாசக்கணக்கில் ஷூட்டிங்கை நடத்தினார். அதுவும் விடுதலை 2 படத்தில் விஜய்சேதுபதிதான் ஹீரோ. அதுபோல நெல்சன் கதையும் ஆகிவிடாமல் இருந்தால் சரி!..
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


