கிராமத்து காமெடி கதையில் விமல்
விமல் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிமுக இரட்டை இயக்குநர்களான எல்சன் எல்தோஸ், மனிஷ் கே தோப்பில் இயக்குகின்றனர். கிராமப்புற பின்னணியில், காமெடி என்டர்டெயினராக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் காரைக்குடியில் தொடங்கியது. மலையாளத்தில் சில படங்களை தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் விநாயகா அஜித் இதை தயாரிக்கிறார். நாயகியாக முல்லை அரசி நடிக்கிறார். மற்றும் சேத்தன், சரவணன் உட்பட பலர் நடிக்கின்றனர். பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இதன் கதையை எழுதியுள்ளனர். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
Source : www.hindutamil.in
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


