சூர்யா நடிக்க மறுத்த 6 படங்கள்!.. இப்படியே போனா மார்கெட் காலி!...

Actor Suriya: நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யா. நேருக்கு நேர் படம் மூலம் சினிமாவில் நடிக்க வந்தவர். உண்மையில் இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையே இருந்தது இல்லை. சில இயக்குனர்கள் முயற்சி செய்தும் ஆர்வமில்லை என சொல்லிவிட்டார். இயக்குனர் வசந்த் கேட்டபோது அவரால் மறுக்கமுடியவில்லை. அயன், சிங்கம், சிங்கம் 2 போன்ற ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

ஜெய்பீம், சூரரைப்போற்று போன்ற நல்ல கதையம்சம் கொண்ட கதைகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு வாங்கினார். ஆனால், கடந்த சில 10 வருடங்களாகவே அவருக்கு வெற்றிப்படங்கள் அமையவில்லை. சிங்கம் 2-வுக்கு பின் அவர் நடிப்பில் தியேட்டரில் வெளியான படங்கள் எதுவும் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை.

காப்பான், எதற்கும் துணிந்தவன், கங்குவா, ரெட்ரோ ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதிலும், கங்குவா படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. நெகட்டிவ் விமர்சனங்களாலேயே இப்படம் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ படமும் ஓடவில்லை. அந்த படத்தை விட டூரிஸ்ட் ஃபேமிலி படம் அதிக வசூலை பெற்றது.


இந்நிலையில் சூர்யா தவறவிட்ட 6 படங்கள் பற்றி பார்ப்போம். கவுதம் மேனன் சொன்ன துருவ நட்சத்திரம் கதையில் சூர்யா நடிக்கவில்லை. அந்த படத்தில் விக்ரம் நடித்தார். சூர்யாவுக்கு சிங்கம் உள்ளிட்ட சில ஹிட் படங்களை கொடுத்த ஹரி இயக்கிய யானை படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. அதிலும் சூர்யா நடிக்கவில்லை.

பாலா இயக்கிய வணங்கான் படத்தில் சில நாட்கள் நடித்துவிட்டு விலகினார். தனக்கு சூரரைப்போற்று படத்தை கொடுத்த சுதா கொங்கரா சொன்ன புறநானூறு கதையில் நடிப்பதாக சொல்லி பூஜையெல்லாம் போட்டபின் நடிக்க மறுத்துவிட்டார். அதுதான் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்க பராசக்தி படமாக உருவாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் சூர்யாவிடம் இரும்பைக்கை மாயாவி என்கிற தலைப்பில் ஒரு கதை சொல்லியிருந்தார். என்னவானதோ தெரியவில்லை. அதில் இப்போது அமீர்கான் நடிக்கவிருக்கிறார். முக்கியமாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருந்த வாடிவாசல் படத்திலிருந்தும் சூர்யா வெளியேறிவிட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.