Atlee: இதுதான் வாயை கொடுத்து அடி வாங்கிறதா? ஓவர் பில்டப்பில் பேசிய அட்லீயை விமர்சிக்கும் ரசிகர்கள்

Atlee: பிரபல இயக்குனர் அட்லீ தன்னுடைய சமீபத்திய பேட்டியால் மீண்டும் ரசிகர்களிடம் வசமாக சிக்கி திட்டு வாங்கி கொண்டு இருக்கிறார்.

பிரபல இயக்குனர் அட்லீ இதுவரை தமிழில் நான்கு திரைப்படங்களும் ஹிந்தியில் ஒரு திரைப்படமும் இயக்கியிருக்கிறார். 5 திரைப்படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய படங்களாக அமைந்தது. ஆனால் விமர்சன ரீதியாக இப்படத்திற்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்களே குவிந்தது.

முதல் முறையாக ஆர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தை இயக்கியிருந்தார். அப்படத்தில் தமிழின் வெற்றிப்படமான மௌனராகம் படத்தை காப்பி அடித்து எடுத்திருப்பதாக பலரும் விமர்சித்தனர். இதைத் தொடர்ந்து விஜயை வைத்து தெறி படத்தை இயக்கினார்.

அப்படமும் விஜயின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றி கொடுத்தது. ஆனாலும் விஜயகாந்தின் சத்ரியன் படத்தின் காப்பி என்று கிசுகிசுக்கப்பட்டது. இதை தொடர்ந்து மெர்சல் திரைப்படத்தினை இயக்க அதில் மூன்று விஜய் நடித்திருந்தனர்.

இப்படத்தினை கமலின் அபூர்வ சகோதரர்கள் காப்பி என பலரும் விமர்சிக்க கமலே இந்த படக்குழுவை பாராட்டினார். ஆனால் அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தின் பின் சுவற்றில் அபூர்வ சகோதரர்கள் புகைப்படத்தை வைத்து கலாய்த்து விட்டதாக ரசிகர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து விஜய் வைத்து மூன்றாவதாக இயக்கிய பிகில் திரைப்படம் நேரடியாக தமிழ் படத்தின் காப்பி இல்லை என கூறப்பட்டாலும் ஹாலிவுட் படங்களின் நிறைய காட்சிகள் அப்பட்டமாக எடுக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அவரை ரசிகர்கள் மீண்டும் விமர்சிக்க தொடங்கினர்.

தொடர்ந்து ஷாருக்கான் வைத்து அட்லீக்கு ஜவான் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அங்கும் இதே பிரச்சினையை எதிர்கொண்டார் அட்லீ. இந்நிலையில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் பிரபல பல்கலைக்கழகத்தால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த விழாவில் பேசிய அட்லீ, பொதுவாக ரசிகர்கள் என்னுடைய படங்கள் காப்பி என விமர்சிக்கின்றனர். ஆனால் அதெல்லாம் என்னுடைய வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்ட இன்ஸ்பிரேஷன் மட்டுமே. எடுத்துக்காட்டாக பிகில் ராயப்பனை ஜே பி ஆர் சாரில் இருந்து தான் உருவாக்கினேன். நீங்க எனக்கு டாக்டரேட் கொடுத்திருக்கீங்க. நான் இந்த நாட்டை பெருமைப்படுத்துவேன். அல்லு அர்ஜுன் உடனான என்னுடைய ஆறாவது படத்தை தெறிக்க விட்டு விடுவோம் என குறிப்பிட்டு இருக்கிறார்.

தற்போது இந்த பேச்சை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். உங்கள் படங்களில் கேரக்டர் இல்ல மொத்த படத்தின் கதைதான் காப்பி. ஒரு கதைனா ஓகே எல்லாம் எப்படி. பொய் சொல்றதுக்கு ஒரு அளவு இல்லையா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.