‘தி பாரடைஸ்’ படப்பிடிப்பு தாமதம் - ரிலீஸ் தள்ளிவைப்பு?
‘தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாவதால், படத்தின் வெளியீடும் தள்ளிப்போகும் என தெரிகிறது. ‘ஹிட் 3’ படத்துக்குப் பிறகு நானி நடிப்பில் உருவாகவுள்ள படம் ‘தி பாரடைஸ்’. இதனை ‘தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கவுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் அறிவிப்பு டீசர் மற்றும் அதற்கான அனிருத் இசை என அனைத்துமே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. உடனடியாக ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகளும் விற்கப்பட்டுவிட்டன.
‘தி பாரடைஸ்’ படம் அறிவிக்கப்பட்ட போதே அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது அது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏனென்றால், இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டு வரும் அரங்குகளின் பணிகள் முழுமையாக முடியவடையாமல் இருக்கிறது. ஆகையால், இதன் படப்பிடிப்பு ஜூலையில் தான் தொடங்கும் என தெரிகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


