படைத்தலைவன் வெற்றியை தொடர்ந்து சண்முக பாண்டியனின் அதிரடி... தெளிவா இருக்காருப்பா!..
Shanmuga pandian: தமிழ் சினிமாவின் அடுத்த வெற்றிபடமாகும் லிஸ்ட்டில் இணைந்து இருக்கும் படைத்தலைவன் படத்தின் ஹீரோ சண்முக பாண்டியனிடன் அதிரடியை பார்த்து சினிமா உலகமே ஆச்சரியப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பாலும், ஆக்ஷன் சண்டை காட்சிகளாலும் ஆச்சரியப்பட வைத்தவர் கேப்டன் விஜயகாந்த். இருந்தும் அவர் மக்களுக்கு செய்த உதவியே அவருக்கான மதிப்பை பலரிடத்திலும் அதிகரித்து வைத்து இருந்தது.
சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலில் கால் வைத்தவர். அதில் தன்னால் முடிந்த அளவு உயரத்தை எட்டினார். பின்னர் உடல்நல பிரச்னையில் சிகிச்சை எடுத்து வந்தவர். ஒராண்டுக்கு முன்னர் இறந்தார். அவர் இறந்த போது அவர் குடும்பத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
அதிலும் நடிப்பில் ஆர்வம் காட்டி வந்த சண்முக பாண்டியனுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்வதாக திரையுலகை சேர்ந்த ராகவா லாரன்ஸ், விஷால் போன்ற முன்னணி நடிகர்களே சொல்லி இருந்தனர். இந்நிலையில் சண்முக பாண்டியனின் படைத்தலைவன் நேற்று வெளியாகி இருக்கிறது.
இதில், யானை வளர்ப்பாளராக சண்முக பாண்டியனின் நடிப்பை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டு விட்டனர். அப்பாவை போல சண்டை காட்சியிலும் மிரட்டி இருப்பதாகவும் தொடர்ந்து இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே குவிந்து வருகிறது.
இந்நிலையில் என்னை ஒரு நடிகராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்களுக்கு தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கோரிக்கை வைத்துள்ளார். தற்போது அதற்கான வேலைகளில் தொடர்ந்து இறங்கி இருக்கிறார்.
படைத்தலைவன் ரிலீஸை முடித்த கையோடு தன்னுடைய கொம்புசீவி படத்தினை முடித்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் பொன்ராம் இயக்கி வரும் இப்படத்தில் சரத்குமார் முக்கிய வேடம் ஏற்று இருக்கிறார்.
விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இப்படமும் சண்முக பாண்டியனுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுக்கும் என்ற பேச்சுகளும் எழுந்து வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


