மகாராஜா ஹிட்டு வீணாப்போச்சே!.. விஜய் சேதுபதி நிலைமை ஐயோ பாவம்!...
Vijay sethupathi: நல்ல கதைகளில் இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்தான் விஜய் சேதுபதி. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என கவனம் ஈர்த்தார். மற்ற நடிகர்களை போல ஹீரோயிசம், பன்ச் டயலாக், 4 சண்டை, 4 பாட்டு, அழகான ஹீரோயின், வெளிநாட்டில் ஒரு பாடல் என்றெல்லாம் கேட்காமல் கதை தனக்கு பிடித்திருந்தால் எப்படிப்பட்ட கதைகளிலும் நடிக்கும் நடிகர் இவர்.
அதனால்தான் இவரை ரசிகர்கள் மற்ற நடிகர்களிலிருந்து வேறுபடுத்தி பார்த்தார்கள். பல புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்த நடிகர் இவர். அதோடு, சில காட்சிகளில் வரும் கேமியோ வேடத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் வில்லன் நடிகராகவும் மாறினார். இவரை அப்படி மாற்றியவர் லோகேஷ் கனகராஜ்தான்.
தான் இயக்கிய மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் விஜய் சேதுபதியை டெரர் வில்லனாக காட்டினார். அந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் என்பதால் விஜய் சேதுபதிக்கு தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் வந்தது. இதற்கிடையில் அவர் ஹீரோவாக நடித்து வெளியான படங்களும் ஓடவில்லை. எனவே, வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியும் ஒப்புக்கொண்டார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலும் இவர்தான் வில்லன். அந்த படம் 1300 கோடியை வசூல் செய்தது.
விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் தோல்வியை கொடுத்த நிலையில் மகாராஜா படம் அவருக்கு கை கொடுத்தது. இந்த படம் தமிழ்நாட்டில் 50 கோடியை தாண்டி வசூல் செய்தது. அதோடு, இந்த கதையில் நடிக்க மற்ற மொழி நடிகர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சீனாவில் கூட இப்படம் நல்ல வசூலை பெற்றது.
இந்நிலையில்தான், கடந்த 4 வருடங்களாக எடுக்கப்பட்டு வந்த ஏஸ் படம் சமீபத்தில் வெளியானது. ஆறுமுக குமார் என்பவர் இயக்கியிருந்த இந்த படம் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது. தமிழ்நாட்டில் வெறும் 2 கோடியை மட்டுமே இப்படம் வசூல் செய்திருக்கிறது. இது விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள தலைவன் தலைவி படத்தின் வியாபாரத்தை பாதித்திருக்கிறது. பாண்டியராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
ஏஸ் படம் தோல்வி என்பதால் தலைவன் தலைவி படத்தின் வினியோக உரிமையை வினியோகஸ்தர்கள் மிகவும் குறைவான விலைக்கு கேட்கிறார்களாம். மகாராஜா படம் ஹிட் அடித்தும் யூஸ் இல்லாமல் போய்விட்டதனால் அப்செட்டில் இருக்கிறாராம் விஜய் சேதுபதி.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


