Kohli: நான் அங்கு இருந்திருந்தால் கோலியை கேப்டனாக்கி இருப்பேன் - யாரைச் சாடுகிறார் ரவி சாஸ்திரி?

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி சமீபத்தில் ஓய்வை அறிவித்திருந்தார்.

இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் திடீர் ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விராட் கோலி

இந்நிலையில் விராட் கோலியின் ஓய்வு குறித்துப் பேசிய இந்திய முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி, "விராட் கோலி ஓய்வு பெற்ற முறையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.

நான் அந்த இடத்திலிருந்திருந்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவரை கேப்டனாக அறிவித்திருப்பேன்.

அவரது ஓய்வு இன்னும் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவருடன் சரியான தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இக்கருத்து பி.சி.சி.ஐ-யை மறைமுகமாகச் சாடுவதாக உள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.