‘பென்ஸ்’ படத்தில் மாதவனுக்கு முக்கிய கதாபாத்திரம்!

'பென்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மாதவன் ஒப்பந்தமாகி இருக்கிறார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பென்ஸ்’. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவுற்றது. அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வருகிறது. இதனை பேஷன் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்கோட் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

‘எல்.சி.யூ’ யுனிவர்சிஸில் இணைந்துள்ளது ‘பென்ஸ்’. இதன் கதையை எழுதி தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதில் ராகவா லாரன்ஸ், நிவின் பாலி, சம்யுக்தா மேனன் உள்ளிட்டோர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள். தற்போது இதில் மாதவன், மடோனா செபஸ்டின் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.