லெஜண்ட் சச்சின் பெயருடன் கோப்பையில் என் பெயரும் சேர்க்கப்பட்டது பெரிய கவுரவம்: ஆண்டர்சன் பெருமிதம்
இங்கிலாந்து - இந்தியா இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் இனி ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி’ என்று அழைக்கப்படும் என பெயர் மாற்றப்பட்டதில் சச்சின் போன்ற லெஜண்டுடன் என் பெயரையும் சேர்த்து நீண்ட கால இந்திய-இங்கிலாந்து டெஸ்ட் மரபில் என்னை இணைத்திருப்பது பெருமையும், கவுரவமும் அளித்திருப்பதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
16 வயதில் உயர்தர கிரிக்கெட்டில் நுழைந்த சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 15,921 ரன்களை எடுக்க, ஜேம்ஸ் ஆண்டர்சன் 188 டெஸ்ட் போட்டிகளில் 704 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து 35 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடியுள்ளனர். 2006-2012 வரை ஜேம்ஸ் ஆண்டர்சனும் சச்சின் டெண்டுல்கரும் 14 முறை களத்தில் நேரடியாகச் சந்தித்துள்ளனர். ஆண்டர்சன் டெண்டுல்கரை 9 முறை வீழ்த்தியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


