MS Dhoni: ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் கௌரவிக்கப்பட்ட தோனி - தோனி ரியாக்ஷன் என்ன?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோணி ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவுக்காக 538 சர்வதேச போட்டிகளில் 17,266 ரன்கள், 829 ஆட்டமிழப்புகள் (catch & Stumped) தோனியின் நம்பர்களின் சிறப்பை மட்டுமல்ல அசாதாரணமான நிலைத்தன்மை, உடற்தகுதி மற்றும் நீண்ட கெரியரையும் பிரதிபலிக்கிறது" என புகழ்ந்துள்ளது ஐசிசி.

Unorthodox, unconventional and effective

A cricketer beyond numbers and statistics

MS Dhoni is inducted in the ICC Hall of Fame

More ➡️ https://t.co/oV8mFaBfze pic.twitter.com/AGRzL0aP79

— ICC (@ICC) June 9, 2025

தோனியுடன் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன், தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் ஆம்லா மற்றும் கிரேம் ஸ்மித் உள்ளிட்ட 7 வீரர்கள் ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

என்.டி.டி.வி தளம் கூறுவதன்படி, ஹால் ஆஃப் ஃபேம் மூலம் கௌரவிக்கப்படுவது குறித்து, "தலைமுறைகள் கடந்து உலகம் முழுவதும் கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெறுவது ஒரு கௌரவம். ஆல்-டைம் சிறந்த வீரர்களுடன் உங்கள் பெயரும் நினைவுகூறப்படுவது சிறப்பான உணர்வு. இதை நான் என்றென்றும் மனதில்கொள்வேன்" எனக் கூறியுள்ளார் தோனி.

MS Dhoni

இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று கோப்பைகளை வெல்ல வைத்த ஒரே இந்திய கேப்டன் MS Dhoni என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.