என் படத்துல சிம்புவா?!.. வெற்றிமாறனுக்கு கூலா பதில் சொன்ன தனுஷ்!.. இதான் மேட்டரு!...
சில தினங்களாக வெற்றிமாறன் சிம்பு கூட்டணி பற்றி தான் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசிக்கொண்டு வருகின்றனர். சிம்புவை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் வாடிவாசல் படத்தை கைவிடப் போவதாகவும் ஒரு தகவல் பரவி வருகின்றன. விடுதலை 2 திரைப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை சூர்யாவை வைத்து எடுப்பார் என்ற ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அதற்கான எந்த ஒரு வேலையிலும் அவர் ஈடுபட்டதாக தெரியவில்லை.
இதற்கு இடையில் வாடிவாசல் படத்திலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அமீர் கண்டிப்பாக அந்த படத்தில் இருக்க வேண்டும் என வெற்றிமாறன் விரும்புகிறார். ஆனால் சூர்யா தரப்பிலோ அமீர் இருப்பது தான் அவர்களுக்கு ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் சூர்யா குடும்பத்திற்கும் அமீருக்கும் இடையே நடந்த பிரச்சனை பற்றி அனைவருக்குமே தெரியும்.
அதனால் அந்த ஒரு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது .இதற்கிடையில் வடசென்னை 2 படத்தை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே வடசென்னை படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலிருந்து அதன் இரண்டாம் பாகம் வருமா என ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர் .
கண்டிப்பாக வரும் என வெற்றிமாறன் சொன்னதால் இப்போது வரை அந்த படத்தை பற்றிய பேச்சு தான் அடிபட்டு வருகிறது .ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் வடசென்னை 2 படம் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு கொண்டே வருகின்றது .இன்னொரு பக்கம் தனுஷ் ஹாலிவுட் பாலிவுட் என பல மொழி படங்களில் பிஸியாக இருக்கிறார் .இந்த பக்கம் வெற்றிமாறனும் அவருடைய வேலையில் பிஸியாக இருக்கிறார் .
dhanush
அதனால் வடசென்னை 2 படத்தை சிம்புவை வைத்து எடுத்தால் என்ன என்ற ஒரு ஐடியாவில் வெற்றிமாறன் இப்போது இருக்கிறாராம். அதை பற்றி தனுஷிடமும் போய் கேட்டிருக்கிறார். அதற்கு தனுஷ் சிறப்பா பண்ணுங்க என சொல்லி அதோடு முடித்து விட்டாராம். ஆனால் குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் வடசென்னை 2 படம் விரைவில் வரும் என கூறியிருந்தார். அதனால் வடசென்னை 2 படத்தை சிம்புவை வைத்து எடுக்கப் போகிறார்களா அல்லது சிம்புவுக்கு வேறொரு கதையை வெற்றிமாறன் வைத்திருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

