தக் லைப் படத்தால் கூலிக்கு வந்த பிரச்சனை!.. ரஜினி செம அப்செட்ல இருக்காராம்!...

Coolie: திரையுலகில் எந்த படம் எந்த படத்திற்கு பிரச்சனையாக வரும் என கணிக்கவே முடியாது. ஒரு நடிகர், இயக்குனர் அல்லது தயாரிப்பாளரின் முந்தைய படம் சூப்பர் ஹிட் என்றால் அவர்களின் அடுத்த படத்தை அதிக விலை கொடுத்து கூட வாங்குவார்கள். அதுவே முந்தைய படம் தோல்வி என்றால் அடிமாட்டு விலைக்கு கேட்பார்கள்.

இதற்கு அவர்களை குறை சொல்லவும் முடியாது. ஏனெனில், ஒரு படத்தை வாங்கி ரிலீஸ் செய்த வினியோகஸ்தர்கள் அந்த படத்தால் நஷ்டம் அடைந்தால் சம்பந்தப்பட்டவர்களின் அடுத்த படத்தை குறைவான விலைக்கு கேட்பார்கள். இது கூட பரவாயில்லை. சில சமயம் ஒரு நடிகரின் படம் மற்றொரு நடிகரின் படத்திற்கும் ஆப்பாக வரும்.

அப்படித்தான் தக் லைப் படத்தின் தோல்வி கூலி படத்தை பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கமல், திரிஷா, சிம்பு, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 5ம் தேதி வெளியானது தக் லைப். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.


ஆனால், படம் வெளியாகி ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. நாயகன் போல ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என நினைத்து தியேட்டருக்கு போனவர்கள் ஏமாற்றத்துடன் வெளியே வந்தார்கள். கதை, திரைக்கதை ஆழமாகவும், சுவாரஸ்யமாகவும் இல்லாததால் படம் ரசிகர்களை கவரவில்லை.

இந்த படத்தை வாங்கி ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இது ரஜினியின் கூலி படத்தின் வியாபாரத்தையும் பாதித்திருக்கிறது. ஆந்திரா ரிலீஸுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் 50 கோடி சொல்லும் நிலையில் 30 கோடிக்கு போகுமா என்பதே சந்தேகமாக இருக்கிறதாம்.

அதோடு, மணிரத்னமும், கமலும் இணைந்து உருவான படமே தோல்வி அடைந்துவிட்டது ரஜினியை மிகவும் அப்செட் ஆக்கியிருக்கிறதாம். ஏனெனில், நமது கூலி படம் என்னவாகுமோ என்கிற பயமும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறதாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.