பேன் இண்டியா ஸ்டாரா கலக்கும் தனுஷ்!... குபேரா பட பட்ஜெட் இவ்வளவு கோடியா?!..

Kubera movie: துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். துவக்கத்தில் அண்ணன் செல்வராகவனிடம் நடிப்பு மற்றும் சினிமாவை கற்றுக்கொண்டாலும் அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டார். வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்த ஆடுகளம், அசுரன் போன்ற படங்களுக்கு தேசிய விருதும் வாங்கினார்.

பல வருடங்களுக்கு முன்பே ஹிந்தியிலும் நடித்தார். இப்போதும் ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், குபேரா எனும் பேன் இண்டியா படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் எடுக்கப்படும் இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு பேன் இண்டியா படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கில் பல படங்களையும் இயக்கியுள்ளார். குபேரா படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார் தனுஷ்.


ஒரு கெட்டப்பில் பிச்சைக்காரன் போல நடித்திருக்கிறார். மும்பையில் கதை நடப்பது போல காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். இது ஒரு சமூக திரில்லர் படமாக உருவாகியிருப்பதாக இயக்குனர் தெரிவித்திருக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

படம் துவங்கும்போது 90 கோடி பட்ஜெட் என்றே முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால், 120 கோடியை தாண்டி இப்போது வட்டியோடு சேர்த்து 150 கோடி வரை வந்துவிட்டதாம். இதில் படத்தின் ஓடிடி உரிமையை 47 கோடிக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். தனுஷின் மார்க்கெட் தென்னிந்தியாவில் அதிகரித்துகொண்டே போவதையே இது காட்டுகிறது. குபேரா திரைப்படம் வரும் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

ஒருபக்கம், இட்லி கடை படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு மற்ற வேலைகள் நடைபெற்று வருகிறது. தனுஷ் இப்போது Tere Ishk Mein என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரின் தோற்றம் தொடர்பான புகைப்படமும் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.