விஜயைப் பொம்பள பொறுக்கி மாதிரி சித்தரிக்க முயற்சி பண்றாங்களாமே? யாரப்பா அவரு?
விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படம் குறித்தும், அவரைப் பற்றி கூத்தாடின்னு விமர்சித்த பிரபல அரசியல் கட்சித் தலைவர் குறித்தும் பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.
பகவந்த் கேசரி படத்துல இருக்குற மாதிரியான ஒரு கதாபாத்திரம் ஜனநாயகன்லயும் இருக்குதாம். அதுல பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா. அதாவது நண்பரின் மகளை பாலகிருஷ்ணா டிரெய்னிங் கொடுத்து கொண்டு வருவாராம். அதே மாதிரி விஷயம் ஜனநாயகன்ல இருக்குதாம்.
அடடா, இதே விஷயம் பகவந்த்கேசரிலயும் இருக்குதேன்னதும் ஒரு சேஃப்டிக்காக அந்தப் படத்தோட ரைட்ஸை வாங்கினாங்களாம். அதுக்கப்புறம் பையனூரில் ஜனநாயகன் படத்துக்கு பகவந்த்கேசரி படத்தோட செட்டுகளை எல்லாம் போட்டுருக்காங்களாம்.
அதனால இவ்ளோ காசைக் கொடுத்து ரைட்ஸை வாங்கிட்டோம். அந்தப் படத்துல உள்ள கதையையே வச்சிடுவோம்னு முடிவு பண்ணிட்டாங்களாம். அதேநேரம் கடைசி படம் வெறும் மசாலாவாக இருக்கக்கூடாது. அரசியலையும் அதுல புகுத்தணும்னு நினைச்சிருக்காங்க.
ஏற்கனவே கமலும், ஹெச்.வினோத்தும் சேர்ந்து ஒரு படம் பண்றதா இருந்தது. அதுல கமல் நிறைய பொலிடிகல் விஷயங்களை வச்சிருந்தாராம். அதை இந்தப் படத்துல பயன்படுத்தலாம்னு முடிவு பண்ணிருக்காங்க. அதுமட்டும் அல்லாம விஜய்க்கு ஏற்ற மாதிரி நிறைய அரசியல் விஷயங்களையும் உள்ளே போட்டுருக்காங்க.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஏன் கூத்தாடி பின்னாடி போறீங்கன்னு விஜயை விமர்சிக்கிறாரு. ஆனா அவரே ஒரு படத்துல நடிச்சிருக்காருன்னு ஆங்கர் கேள்வி எழுப்ப அதற்கு பிஸ்மி சொன்ன பதில் இதுதான்.
அவரு நடிச்சிருக்காருங்கறதைத் தாண்டி திமுக கூட்டணில இருக்காரு. அதே கூட்டணில உள்ள கமலுக்கு இன்னைக்கு ராஜ்யசபா பதவி கொடுத்துருக்காங்க. நீங்க ஏன் கேட்கவே இல்லை. ஏன் கூத்தாடி, கோமாளிக்குக் கொடுக்குறீங்கன்னு கேட்க வேண்டியதுதானே. வேல்முருகன் பார்வையில் கூத்தாடிங்கறது விஜயும், கமலும் ஒண்ணுதானே.
விஜயோடு ஒரு பெண் போட்டோ எடுத்தாலே தவறாக சித்தரிக்க முயற்சி பண்றாரு. விஜயை ஒரு பொம்பளைப் பொறுக்கி மாதிரி சித்தரிக்க முயற்சி பண்றாரு. இது வந்து அயோக்கியத்தனம். ஒரு கட்சி தலைவரா இருந்துக்கிட்டு இப்படி பேசக்கூடாது. அதனால தான் தவெக வைச் சேர்ந்தவர்கள் வேல்முருகன் மன்னிப்புக் கேட்கணும்னு சொல்றாங்க. என்ன பண்ணனும்னா தவெக தொண்டர்கள் வேல்முருகன் அலுவலகத்தை முற்றுகை இட்டுருக்கணும். அந்த அறிவு கூட இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

