‘ரெட்ரோ’வை முந்தாத ‘தக் லைஃப்’ முதல் நாள் வசூல்!
மணிரத்னம் - கமல் கூட்டணியின் ‘தக் லைஃப்’ படத்தின் முதல் நாள் வசூல், இந்திய அளவில் ரூ.17 கோடி மட்டுமே என உறுதியான தகவல்கள் கூறுகின்றன. ஒப்பீட்டளவில், சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் முதல் நாள் வசூலைக் கூட இப்படம் முந்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வியாழக்கிழமை வெளியானது. கர்நாடகாவில் மட்டும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இப்படம் வெளியாகவில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

