இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியில் ஜேமி ஓவர்டன்
லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தத் போட்டிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027-ம் ஆண்டு சுழற்சியில் இந்தியாவுக்கு முதல் தொடராக அமைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜேமி ஓவர்டன் 3 வருடங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார். அதேவேளையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான கஸ் அட்கின்சன் காயம் காரணமாக விலகி உள்ளார். அவர், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்திருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


