ஒருவழியா தேதியை குறித்த பிரபாஸ்!.. ராஜா சாப் இந்த வருஷமே ரிலீஸ்!.. எப்போ தெரியுமா?
ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் மாருதி இயக்கத்தில் பீப்பிள் மீடியா ஃபேக்டரி மற்றும் எம்.ஆர்.ஓ. எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் ராஜா சாப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளனர்.
ராஜா சாப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு, வரலட்சுமி சரத்குமார், சஞ்சய் தத் மற்றும் ரித்தி குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இது பிரபாஸின் வழக்கமான ஆக்ஷன் படங்களிலிருந்து வேறுபட்டு காதல் கதையுடன் கூடிய திகில் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சினிமாவில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக ராஜா சாப் இருக்கும் என இயக்குனர் மாருதி தெரிவித்துள்ள நிலையில், பிரபாஸின் முந்தைய படங்களான பாகுபலி மற்றும் சலார் போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு, இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
மேலும், ராஜா சாப் படத்தின் டீசர் வருகின்ற ஜூன் 16ம் தேதி காலை 10:52 மணி அளவில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இப்படம் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் எக்ஸ் தளத்தில் போஸ்டருடன் பகிர்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டு அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படமும் டிசம்பர் 5தேதி வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் ராஜா சாப் படத்தையும் அதே தேதியில் வெளியிட்டு பாக்ஸ் ஆபிஸில் வசுலை அள்ளி விடுமோ என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

