வீட்டிற்கு அழைத்து மகாராஜாவை பாராட்டிய Birdman பட திரைக்கதையாசிரியர் - நெகிழ்ந்த நித்திலன்
குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் நித்திலன் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தியாவில் மட்டுமின்றி சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் இந்தப் படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்தது.
மகாராஜா’ படத்தைப் பார்த்த ஆஸ்கர் விருது வென்ற BIRDMAN படத்தின் இயக்குநர் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியதாகவும், அவரது அடுத்த படத்தில் நடிக்க அனுராக் காஷ்யப்புக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் நித்திலன் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அமெரிக்கா சென்றுள்ள இயக்குநர் நித்திலன், நியூயார்க்கில் BIRDMAN பட திரைக்கதை எழுத்தாளர் அலெக்சாண்டர் டினோலாரிஸை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அவர், "என்றைக்கும் மனதில் வைத்து போற்றும் வகையிலான ஒரு சம்பவம் நியூயார்க்கில் நடந்தது.
A moment to cherish in NewYork #Birdman is one of my all-time favorite films. It’s not every day that you get to dine and spend time with an Oscar-winning screenwriter.
— Nithilan Saminathan (@Dir_Nithilan) May 31, 2025
Thank you, #AlexanderDinelaris for inviting me to your home and showing me such kindness. I am truly… pic.twitter.com/4jzgPjqk24
பேர்ட்மேன் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ஆஸ்கர் விருது பெற்ற திரைக்கதை எழுத்தாளருடன் உணவருந்தி நேரத்தை செலவிடுவது என்பது சிறந்த அனுபவம். என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்து இவ்வளவு அன்பை காட்டியதற்கு நன்றி அலெக்சாண்டர் டினோலாரிஸ்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

