ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் படத்தில் திஷா பதானி!
இந்தி நடிகையான திஷா பதானி, தமிழில் சூர்யாவுடன் ‘கங்குவா’ படத்தில் நடித்திருந்தார். இவர் இப்போது ‘ஹோலிகார்ட்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற நடிகரும் இயக்குநருமான கெவின் ஸ்பேஸி, இந்த சூப்பர் நேச்சுரல் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்குகிறார்.
இவர், ‘தி யூசுவல் சஸ்பெக்ட்ஸ்’ (1995) படத்துக்காகச் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் ‘அமெரிக்கன் பியூட்டி’ (1999) படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றவர். இதன் படப்பிடிப்பு மாஸ்கோவில் நடந்து வருகிறது. இதில், டால்ஃப் லண்ட்கிரென், டைரிஸ் கிப்சன், பிரையனா ஹில்டெபிராண்ட் என பலர் நடிக்கின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

