தோனி என்கிட்ட ஒன்னு சொன்னார்!.. மறக்கவே மாட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசும் யோகிபாபு..
Yobibabu: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஹிட் அடித்த லொள்ளு சபா நிகழ்ச்சியில் கூட்டத்தில் நிற்கும் நடிகராக நடித்தவர்தான் யோகி பாபு. உதவி இயக்குனராக வேண்டும், சினிமாவில் கதை எழுத வேண்டும் என அவருக்கு சில ஆசைகள் இருந்தது. ஆனால், லொள்ளு சபா இயக்குனர் ராம் பாலா பாபுவை நடிகராக மாற்றினார்.
அதன்பின் இயக்குனர் அமீர் ஹீரோவாக நடித்து வெளியான யோகி படத்தில் பாபுவுக்கு முக்கிய வேடம் கிடைத்தது. அதுமுதல் ரசிகர்கள் இவரை யோகி பாபு என அழைக்க துவங்கிவிட்டனர். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
இயக்குனர் சுந்தர்.சி இவருக்கு தனது படங்களில் தொடர் வாய்ப்புகள் கொடுத்தார். கலகலப்பு, அரண்மனை உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார் யோகிபாபு. வடிவேலுவை தமிழ் சினிமா ஒதுக்கிவிட, சந்தானமும், சூரியும் ஹீரோவாக நடிக்கப்போய்விட தமிழ் சினிமாவில் யோகிபாபுவை விட்டால் காமெடிக்கு யாருமில்லை என்கிற நிலை உருவானது.
எனவே, தொடர்ந்து பல படங்களிலும் நடித்து கல்லா கட்டினார். தினமும் 10 லட்சம் என சம்பளம் வாங்கும் அளவுக்கு முன்னேறினார். சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்தார். அப்படி அவர் நடித்ததில் மண்டேலா படம் மட்டுமே பேசப்பட்டது. மற்ற படங்கள் ஓடவில்லை. ஆனால், தொடர்ந்து கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய யோகி பாபு இந்திய கிரிக்கெட் வீரர் தோனியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பேசியிருக்கிறார். எல்.ஜி.எம் பட விழாவில் தோனி தனது மனைவி சாக்ஷி என்னை அழைத்து தோனி அருகில் அமர சொன்னார். நான் ‘ஏன் மேடம்?’ எனக்கேட்டேன். அதற்குக் தோனிதான் உங்களை அருகில் அமர சொன்னார்’ என அவர் சொன்னார்.
நான் தோனி அருகில் அமர்ந்தவுடன் அவர் என்னிடம் ஆங்கிலத்தில் பேசினார். ‘சார் எனக்கு இங்கிலீஸ் தெரியாது’ என சொன்னேன். அதற்கு தோனி ‘இங்கிலீஸ் எனக்கும் சரியா தெரியாது. அதற்காக கவலைப்பட வேண்டாம். நீங்களும் நானும் ஜெட் வேகத்தில் போய்கொண்டே இருக்கிறோம். அதுதான் வேண்டும்’ என சொன்னார். அவர் ஒரு அற்புதமான மனிதர்’ என யோகிபாபு சொல்லியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


