அஜித் பாட்டு இல்லன்னா நான் இல்ல... ராகவா லாரன்ஸ் இப்படி பொசுக்குன்னு சொல்லிப்புட்டாரே!

நடிகர் ராகவா லாரன்ஸ் ஆரம்பகால கட்டத்தில் படங்களில் பாடலுக்கு நடனம் ஆடுபவராகவே வந்தார். அவரது வேலை டான்ஸ் மாஸ்டர். அதில் தான் அவருக்கு திறமை அதிகம். அதில் இருந்து தான் படிப்படியாக நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என்று முன்னுக்கு வந்தார். இவரது படங்களில் முனி, காஞ்சனா சீரியஸ் எல்லாமே சூப்பர் டூப்பர்ஹிட். அந்த வகையில் திகில் படங்களில் இவர் மாபெரும் வெற்றி கண்டார். இவரது நடிப்பில் ஸ்டைல், முனி, டான், ராஜாதி ராஜா, காஞ்சனா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் சக்கை போடு போட்டன. சமூக சேவையிலும் அக்கறை கொண்டவர். மாற்றத்திறனாளிகள், அனாதை குழந்தைகளுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். தன் படங்களின் லாபத்தில் ஒரு பகுதியை இவர்களுக்காகவே செலவழிக்கிறார். படங்களிலும் இவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

தற்போது அதிகாரம், பென்ஷ், கால பைரவா, புல்லட், காஞ்சனா 4, ஹன்டர் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். பாடகர், பாடலாசிரியர், இசை அமைப்பாளராகவும் கூட பணிபுரிந்துள்ளார். காஞ்சனா படத்தில் நில்லு நில்லு பாடலை எழுதியுள்ளார்.

உழைப்பாளி, ஹிட்லர், சின்ன மேடம், அமர்க்களம், திருநெல்வேலி, ரோஜா கூட்டம் படங்களில் பாடலுக்கு டான்ஸராக வந்து கலக்கியுள்ளார். இவர் தற்போது அஜித் குறித்து ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார்.


உண்மையை சொல்லணும்னா எனக்கும் அஜித் சாருக்கும் பெரிய நட்பு எல்லாம் கிடையாது. ஆனால் அமர்க்களம் படம் பண்ணும்போது, மகாகணபதி பாடலுக்கு அவர் முழு பாடலுக்குமே ஆடி இருக்கலாம். அப்போவே அவர் பெரிய ஹீரோவா இருந்தாரு.

சரண் சார், நான் அந்தப் பாட்டில் ஆடுகிறேன் என்று சொன்னதுக்க பிறகு அஜித் சார் நினைச்சிருந்தால் அவரும் ஆடி இருக்கலாம். ஆனா என்னுடைய டான்சை பார்த்துட்டு அந்த தம்பி நல்லா ஆடுறாரு. அவரே ஆடட்டும் என்று சொல்லி விட்டார். மகா கணபதி பாடல் இல்லன்னா நான் ஸ்கிரீன்ல வந்திருக்க மாட்டேன். இப்போ நடிகராக உட்கார்ந்து இருக்க மாட்டேன் என்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.