எந்த மாதிரி படத்தை எடுப்பது என்பதில் குழப்பம்: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல்
சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி நடிப்பில் உருவாகியுள்ள படம், 'மெட்ராஸ் மேட்னி'. கார்த்தி கேயன் மணி இயக்கியுள்ள இதை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஆனந்த் ஜி.கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு கே.சி.பாலசாரங்கன் இசையமைத்துள்ளார். ஜூன் 6-ம் தேதி, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறது.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “மொத்த இந்திய சினிமாவும் இன்று முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது. சினிமாவின் மார்க்கெட் முழுவதும் மாறியிருக்கிறது. கடந்த ஒரு வருடமாக என்ன படம் செய்வது என்பதில் எல்லோரிடமும் குழப்பம் இருக்கிறது. ஆனால் மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறார்கள். நல்ல படங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


