தக் லைப்புக்கு போட்டியா அந்த படம்!.. ரெட்ரோ மாதிரி ஆயிட்டா கமலுக்கு ஆப்புதான்!...

Thug Life: மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் தக் லைப். இந்த படத்தில் திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். நாயகன் படம் வெளியாகி 38 வருடங்கள் ஆன நிலையில் கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

எனவே, இந்த படத்தின் மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக சிம்பு நடித்திருப்பது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றே நம்பலாம்.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களும் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே கமல், மணிரத்னம், சிம்பு, திரிஷா என பலரும் பறந்து பறந்து பல இடங்களிலும் புரமோஷன் செய்து வருகிறார்கள். அதிலும், கமல் மிகவும் ஆக்டிவாக புரமோஷன் செய்து வருகிறார். மணிரத்னமும், கமலும் ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுத்து வருகிறார்கள்.

ஒருபக்கம், கன்னட மொழி பற்றி கமல் பேசியது கர்நாடகாவில் எதிர்ப்பை பெற்றிருக்கிறது. மன்னிப்பு கேட்கமுடியாது என கமல் சொல்லியிருப்பதால் தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியாகுமா என்பது தெரியவில்லை. மற்றொரு பக்கம் தக் லைப் படம் வெளியாகும் அதேநாளில் மெட்ராஸ் மேட்னி என்கிற சின்ன படம் வெளியாகவுள்ளது.


பொதுவாக ஒரு பெரிய படம் வெளியாகும்போது சின்ன படத்தை வாங்கி யாரும் ரிலீஸ் செய்யமாட்டார்கள். இந்த படம் நன்றாக இருப்பதாக தகவல் பரவ இப்படத்தை வாங்க போட்டியே நடந்திருக்கிறது. இறுதியில் மாநாடு பாட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை வாங்கி வெளியிடுகிறார். தக் லைப் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், மெட்ராஸ் மேட்னி 6ம் தேதி வெளியாகவுள்ளது.

சூர்யாவின் ரெட்ரோ படம் வெளியான போது சசிக்குமாரின் டூரிஸ்ட் பேமிலி படம் வெளியானது. வெறும் 8 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரெட்ரோ படத்தை விட அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. அதுபோல் மெட்ராஸ் மேட்னி படத்தால் தக் லைப் படத்தின் வசூல் பாதிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.