இது அதுல்ல… ஐஸ்வர்யா நடிப்பில் சீதா பயணம்… அப்பா அர்ஜூன் சாதிப்பாரா? சறுக்குவாரா? டீசர் கொடுத்த ஷாக்!

Aishwarya Arjun: ஐஸ்வர்யா அர்ஜூன் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் சீதா பயணம் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என செல்லமாக அழைக்கப்பட்டு வந்தவர் அர்ஜூன். அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் சூப்பர்ஹிட் வெற்றியை கொடுத்து வந்தது. நடிப்பு மட்டுமல்லாமல் டைரக்‌ஷனிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

1992ம் ஆண்டு சேவகன் என்ற படத்தினை இயக்கினார். அப்படம் சுமார் வெற்றியை பெற்றாலும் தொடர்ச்சியாக 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார். சமீபத்தில் கூட துருவ் சர்ஜாவின் மார்ட்டின் படத்தின் கதையை எழுதியது அர்ஜூன் தான்.

இந்நிலையில் இவருடைய இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் திரைப்படம் சீதா பயணம். இப்படத்தினை அவருடைய தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீராம் இண்டர்நேஷனல் மூலம் அர்ஜூனே தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தில் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தின் ஹீரோவாக விஸ்வாக் சென் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டு நிரஞ்சன் சுதியை என்னும் புதுமுக நடிகரை அறிமுகம் செய்து இருக்கிறார்.


இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. அதில், கிட்டத்தட்ட இருவரின் கார் பயணம் அதிகம் இருப்பதால் பையா படத்தினை போல இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் டீசரின் இறுதியில் துருவ் சர்ஜா ஒரு கேமியோ ரோலிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.