Dhadak 2: தணிக்கையில் 16 ‘கட்’ உடன் ரிலீஸுக்கு தயாரான ‘பரியேறும் பெருமாள்’ இந்தி ரீமேக்
மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இந்தி ரீமேக் ஆன ‘தடக் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘தடக் 2’. இதில் சித்தாந்த் சதுர்வேதி, திரிப்தி திம்ரி பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழில் 2018ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ரீமேக் ஆகும். இதன் முதல் பாகம் மராத்தியில் நாகராஜ் மஞ்சுலே இயக்கிய ‘சாய்ராட்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


