இப்படி ஒரு முகமூடி தேவையா? இதுக்குத்தான் அடக்கி வாசிக்கணும்.. ‘சூர்யா 46’ல் இருக்கும் குழப்பம்

surya46surya46

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. கங்குவா திரைப்படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ. கங்குவா படத்தின் தோல்வியை ரெட்ரோ திரைப்படம் மறக்க செய்யும் என நம்பினார்கள். ஆனால் சில பேர் ரெட்ரோ திரைப்படத்திற்கு கங்குவா திரைப்படமே மேல் என கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்கள்.

சமீபகாலமாக சூர்யாவின் திரைப்படங்கள் ரசிகர்களை எதிர்பார்த்த அளவு கவரவில்லை. அதற்கான காரணம் சூர்யா தான் என்றும் கூறி வருகிறார்கள். வெறுமனே ஆக்சன் மாஸ் இவற்றையே நம்பி சூர்யா கதைகளில் கோட்டை விட்டு விடுகிறார் என்றும் சரியான கதைகளை அவர் தேர்ந்தெடுப்பதில்லை என்றும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவருடைய 45 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நேற்று ஹைதராபாத்தில் அவருடைய 46வது படத்தின் பூஜை நடைபெற்றது. அந்த படத்தை லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்த படத்திற்கு இசை ஜீவி பிரகாஷ் .சூரரைப் போற்று திரைப்படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் இந்த படத்தில் ஜீவி இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு குறுகிய கால படபிடிப்பாக நடைபெற இருக்கிறதாம். அதனால் சீக்கிரமே இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விடுவார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையில் சூர்யா 46 படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதற்குப் பின்னணியில் ஒரு சம்பவமே இருப்பதாக தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது சூர்யா 46 படத்தை ஞானவேல் ராஜா தான் தயாரிக்கிறாராம். ஆனால் டைட்டிலில் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் என்று தான் போடுகிறார்களாம். ஏனெனில் ஏற்கனவே ஞானவேல் ராஜா தயாரிப்பில் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவி இருக்கிறது. மீண்டும் அவர் தயாரிக்கிறார் என்றால் இந்த படத்திற்கான பிசினஸ் என்பது எதிர்பார்த்த அளவு வராது என்ற காரணத்தினால் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஞானவேல் ராஜாவுக்காக இதை நாங்கள் செய்கிறோம் என சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.