Soori: வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை; அப்படி வந்தால்... - நடிகர் சூரி சொல்வது என்ன?

‘விலங்கு’ வெப்சீரிஸ் இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘மாமன்’.

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருக்கிறார்.

தவிர ராஜ்கிரண், ஸ்வாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மாமன்

மே 16 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது.

படத்தின் வரவேற்பு குறித்து தொடர்ந்து சூரி செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "படத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

குடும்பம், குடும்பமாக வந்துப் படத்தைப் பார்ப்பது எனக்கு மகிழ்சியாக இருக்கிறது. என்னுடைய அடுத்தப் படம் குடும்பம் சார்ந்தப் படமாகவும் இருக்கும், ஆக்சன் சார்ந்த படமாகவும் இருக்கும்.

நடிகர் சூரி
நடிகர் சூரி

இன்றைக்கு எல்லோருக்கும் பிடித்தமான ஒரு சூரியாக இருக்கிறேன். கதைநாயகனாக என்னை வெற்றி அடைய செய்துவிட்டீர்கள்.

நானும் எப்போதும் உங்களில் ஒருவனாக இருக்க ஆசைப்படுகிறேன். அதேபோல உங்களில் ஒரு ஹீரோவாகவும் இருக்க ஆசைப்படுகிறேன்.

வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நடிப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.