உன் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் டார்லிங் - விஜய் சேதுபதியைச் சந்தித்தது குறித்து விஷால்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கிற ஏஸ் திரைப்படம் இம்மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் ருக்மிணி வசந்த், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

ருக்மிணி வசந்த் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

‘ஏஸ் படத்தில்...

படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் விஜய் சேதுபதி.

சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஷாலும் விஜய் சேதுபதியும் சந்தித்திருக்கிறார்கள்.

இந்தச் சந்திப்பு குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார் விஷால்.

இந்தப் பதிவில் அவர், "சென்னை விமான நிலையத்தில் என் அன்பு நண்பர், பன்முக நடிகர் விஜய் சேதுபதியைச் சந்தித்தேன்.

அவரைப் பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சி. அவர் எப்போதும் ஆற்றல் நிறைந்தவர். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்தேன்.

சில நிமிடங்கள் மட்டுமே பேசியிருந்தாலும், அவருடன் உரையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

உனது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் டார்லிங். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். விரைவில் மீண்டும் சந்திக்க ஆவலாக உள்ளேன்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Vishal (@actorvishalofficial)

இப்படத்தைத் தாண்டி விஜய் சேதுபதி நடித்திருக்கும் ட்ரெயின், தலைவன் தலைவி ஆகிய திரைப்படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

இயக்குநர் பூரி இயக்கத்திலும் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.