பெங்களூருவில் கோலியின் டெஸ்ட் ஜெர்ஸி விற்பனை ஜரூர்: கொண்டாட தயாராகும் ஆர்சிபி ரசிகர்கள்!
பெங்களூரு: இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2025 சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில், அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த விராட் கோலியை போற்றும் வகையில் அவரது டெஸ்ட் ஜெர்ஸி விற்பனை பெங்களூருவில் அமோகமாக நடைபெறுகிறது.
இதற்கு காரணம் ஆர்சிபி ரசிகர்கள் தான். ஐபிஎல் சீசன் மீண்டும் தொடங்கும் நிலையில் அதன் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற கோலியை போற்றும் வகையில் இந்த ஆட்டத்தை காண வரும் ரசிகர்கள் கோலியின் டெஸ்ட் ஜெர்ஸியை அணிந்து வர வேண்டும் என ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


