இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் ஜாஸ்மின் பவுலினி
ரோம்: இத்தாலின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, 13-ம் நிலை வீராங்கனயைன ரஷ்யாவின் டயானா ஸ்னைடருடன் மோதினார்.
இதில் பவுலினி 6-7 (1-7), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் 11 ஆண்டுக்கு பிறகு இத்தாலி ஓபன் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இத்தாலி வீராங்கனை என்ற பெருமையை ஜாஸ்மின் பவுலினி பெற்றார். இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு சாரா எரானி அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


