அழகர், புத்தர், எடப்பாடி பழனிசாமி, என் மகள்! - அப்பா ஆன சந்தோஷத்தில் நாஞ்சில் விஜயன்
கலக்கப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகர் நாஞ்சில் விஜயனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.
முன்னதாக கடந்த 2023 செப்டம்பர் மாதம் இவருக்கும் மரியா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
மரியா தேசிய அரசியல் கட்சி ஒன்றின் குடும்ப பின்னணியைக் கொண்டவர்.
இவர்களது திருமணம் லவ் கம் அரேஞ்ச்டு மேரேஜ்.
திருமணம் முடிந்ததைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் மரியா தாய்மை அடைந்தார்.
எனவே கடந்த மாதம் மரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
ரோபோ சங்கர் குடும்பத்தினர், நடிகர்கள் ராஜ்கமல், சாய் சக்தி, ரேகா நாயர், அனிதா சம்பத் எனப் பல நட்சத்திரங்கள் திரளாக இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மரியாவுக்குப் பிரசவ வலி ஏற்பட ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அட்மிட் செய்யப்பட்டார்.
தொடர்ந்து நேற்று காலை அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் மரியா.
நாஞ்சில் விஜயனுக்கு வாழ்த்துச் சொல்லிப் பேசினோம்.
இந்தத் தருணத்தை ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நார்மல் டெல்வரிக்கு வாய்ப்பில்லைனு சொன்னப்ப லேசா கவலை உண்டாச்சு.

ஆனா எந்தப் பிரச்னையும் இல்லாம ஆபரேஷன் பண்ணி குழந்தையைக் கையில் கொண்டு வந்து கொடுத்துட்டாங்க.
பெண் குழந்தைதான் எதிர்பார்த்தேன். இதை நான் சும்மா ஃபார்மால்டிக்குச் சொல்றேன்னு நினைச்சுடாதீங்க சார்.
பொதுவா முக்கால்வாசி அப்பாக்கள் முதல் பிரசவம்னா பெண் குழந்தையைத்தான் எதிர்பார்ப்பாங்க.
மரியாவைக் கேட்டா, என் விருப்பம்தான் அவ விருப்பம்னு சொல்வா. அதனால பெண் குழந்தை வந்ததுல குடும்பத்துல எல்லாருக்கும் மகிழ்ச்சிதான்.
அதுவும் போக என் பொண்ணு வந்த நாள் சாதாரண நாள் இல்லை.
மதுரையில் அழகர் ஆத்துல இறங்கின நாள். பௌர்ணமிலயும் விசேசமான சித்ரா பௌர்ணமி. இன்னொரு முக்கிய விசேஷமான புத்த பூர்ணிமா.

அதேபோல தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளும் இந்த நாள்தானாம்.
எத்தனை சம்பவங்கள் பாருங்க? அதனால இரட்டிப்பு சந்தோஷம்னெல்லாம் கிடையாது. டபுள் இரட்டிப்புனு சொல்லலாம் எனக் குதூகலிப்பவர், மகளுக்குப் பெயர் தேடும் படலத்தை இப்போதே தொடங்கி விட்டாராம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


