மே 14-ம் தேதி படப்பிடிப்பு நடக்கும்: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சி அமைப்புக்கும் ஏற்பட்ட மோதல் போக்கை அடுத்து, தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பைத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ‘பெப்சி’ அமைப்பு, வரும் 14-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்துள்ளது.
அன்று படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடக்‌ஷன் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாது என்றும் ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கு அருகே காலை 9 மணி முதல் 1 மணி வரை நடக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


