ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் கங்கனா ரனாவத்

பிரபல நடிகையும் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத், இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களை இயக்கியும் இருக்கிறார். அவர் இப்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார். அனுராக் ருத்ரா இயக்கும் ‘பிளஸ்டு பி தி எவில்’ என்ற ஹாலிவுட் ஹாரர் படத்தில் அவர் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதில் ‘டீன் வுல்ஃப்’ உட்பட சில படங்களில் நடித்த ‘டெய்லர் போஸே’, பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ரோஸ் ஸ்டாலோன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லயன் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படம் இந்திய நாட்டுப்புறக் கதைகளின் அடிப்படையில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு நியூயார்க்கில் தொடங்க இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

Source : www.hindutamil.in

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.