பாடகியுடன் ஜோடியாக கல்யாணத்துக்கு வந்த ஜெயம் ரவி!. அப்ப அதானா?!...
ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரவி. இந்த படம் ஹிட் அடிக்கவே ரவியின் பெயருக்கு முன்னால் ஜெயம் சேர்ந்துகொண்டது. அதன்பின் பல படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். ஜெயம் ரவி படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் இவரை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்களும் முன் வந்தனர்.
ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில்தான் மனைவி ஆர்த்தி மீது அடுக்கடுக்கான புகார்களை சொல்லி அவரை பிரிவதாக அறிவித்தார் ஜெயம் ரவி. சில மாதங்கள் அவர் சென்னையிலேயே இல்லை. கோவாவில் தனது தோழி கெனிஷாவிடம் நேரம் செலவழித்ததாக சொல்லப்பட்டது.
பாடகி, சமூக சேவகி, மன அழுத்தத்தை போகும் சிகிச்சை அளிப்பவர் என பல முகங்களை கொண்டவர் கெனிஷா. எனவே, அவருக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், ஜெயம் ரவி அதை மறுத்தார். அவர் எனக்கு தோழி மட்டுமே. ஒருவர் மீது தவறாக பழி போடாதீர்கள் எனவும் கேட்டுகொண்டார். அதேபோல், கெனிஷாவும் அதை மறுத்தார்.
தனது செலவுக்கு கூட மனைவி ஆர்த்தி பணம் கொடுப்பதில்லை, எல்லாவற்றுக்கும் கணக்கு கேட்கிறார், எங்கு சென்றாலும் என்னை சந்தேகப்படுகிறார், நான் சம்பாதிக்கும் பணத்தை கூட அவரே நிர்வகிக்கிறார் என பல புகார்களை ஜெயம் ரவி சொன்னார். ஆனால், ஆர்த்தியோ ‘என்ன நடக்கிறது என்பதே எனக்கு தெரியவில்லை. நான் விவாகரத்தை விரும்பவில்லை’ என சொன்னார்.
ஆனால், ஆர்த்தியை பிரிவது என்பதில் ஜெயம் ரவி உறுதியாக இருந்தார். தற்போது ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. மும்பையில் தனது அலுவலகத்தை துவங்கி அங்கிருந்தவாறே சினிமா வேலைகளை பார்த்து வருகிறார். இந்நிலயில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் கலந்துகொண்டிருக்கிறார்.
ஜெயம் ரவி பட்டு சட்டை, வேஷ்டியோடு கலந்துகொள்ள கெனிஷா பட்டுப்புடவை கட்டி வந்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக துவங்க ‘இது ஜெயம் ரவியின் வாழ்க்கை. அவரின் முடிவு. மகிழ்ச்சியாக இருக்கட்டும்’ என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


