Maaman: எனக்கு வரும் 10 கதையில் 5 கதை சூரி அண்ணனுக்காக எழுதப்பட்டது - லோகேஷ் கனகராஜ்
வெற்றிமாறனின் `விடுதலை படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி, `கருடன் எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி.
இதையடுத்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த மாமன் திரைப்படம் வரும் மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது.
இயக்குநர் பாண்டியராஜி உதவி இயக்குநராக இருந்தவர் பிரசாந்த் பாண்டிராஜ். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதன் வெளியீட்டையொட்டி இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றிருந்தது.
இவ்விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ், "கமர்ஷியல் குடும்பப் படத்துக்கான எல்லாமும் இந்தப் படத்தில் இருக்கு. அதுலயே படத்தின் வெற்றி நிச்சயமாகிவிட்டது.
படம் சூப்பர் ஹிட்தான். சமீபமாக இதயத்திற்கு இலகுவான திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெறும்.
ஒருத்தர் வளர்கிறத பார்த்து எல்லாரும் சந்தோஷப்பட்டு நம்ம வளர்ச்சியாக அதைப் பார்க்கிறதுதான் உண்மையான வளர்ச்சினு நான் நினைக்கிறேன். சூரி அண்ணனின் வளர்ச்சி அப்படிப்பட்ட வளர்ச்சிதான்.

நானும் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து படங்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டேன். என்கிட்ட கதை சொல்ல வருகிற இயக்குநர்கள் 10 கதை எழுதுனா, அதுல 5 கதை சூரி அண்ணனுக்காக எழுதுறாங்க. சூரிய அண்ணனோட அந்த வளர்ச்சி பயங்கர பெருசாக இருக்கு" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


