கவுண்டமணியை கட்டித்தழுவி ஆறுதல் சொன்ன விஜய்!.. வைரல் புகைப்படங்கள்!..
90களில் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருந்த கவுண்டமணி, செந்திலையும் தன்னுடன் சேர்த்துகொண்டு பல படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார் கவுண்டமணி – செந்தில் இருந்தாலே படம் ஹிட் என்கிற நிலைமையும் உருவானது. தனி டிராக் காமெடி செய்து வந்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் இரண்டாவது ஹீரோ போல மாறினார்.
பிரபு, கார்த்திக், சத்தியராஜ், சரத்குமார் போன்ற நடிகர்களின் படங்கள் ஓடுவதற்கு முக்கிய காரணமாக கவுண்டமணி இருந்தார். கோலிவுட்டில் ஒருநாளைக்கு இவ்வளவு லட்சம் என சம்பளம் வாங்கிய முதல் நகைச்சுவை நடிகர் இவர்தான். கடந்த பல வருடங்களாகவே கவுண்டமணி சினிமாவில் நடிக்கவில்லை.
வயது மூப்பு காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு ஒத்த ஓட்டு முத்தையா என்கிற படம் வெளியானது. ஆனால், அந்த படம் ஓடவில்லை. கவுண்டமணி எந்த ஊடகங்களுக்கும் பேட்டி கொடுப்பது இல்லை. தனது குடும்பம் பற்றி எங்கேயும் அவர் பேசியது இல்லை. அவர்களின் புகைப்படங்கள் கூட அதிகம் வெளியானது இல்லை.

கவுண்டமணியின் மனைவி சாந்தி(67) உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் இறுதிச் சடங்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, திரையுலகினரை சேர்ந்தவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில் சென்று கவுண்டமணியை கட்டித்தழுவி ஆறுதல் சொல்லியிருக்கிறார். மறைவு பற்றி விசாரித்துவிட்டு சில நிமிடங்களில் அவர் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். விஜய்க்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் கவுண்டமணி. அவருடன் கோயம்பத்தூர் மாப்ள உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

ஏற்கனவே நடிகர்கள் செந்தில், சத்யராஜ், நிழல்கள் ரவி போன்றவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், விஜயும் நேரில் சென்று கவுண்டமணிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
The post கவுண்டமணியை கட்டித்தழுவி ஆறுதல் சொன்ன விஜய்!.. வைரல் புகைப்படங்கள்!.. first appeared on Cinereporters.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


