பழைய டபார செட்டுகளை நம்பினால் கடைசியில் விபூதிதான்! சூர்யாவுக்காக பரிதாபப்படும் ப்ளூ சட்டை
Suriya: தமிழ் சினிமாவில் அனைவரும் மதிக்கத்தக்க நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் சினிமாவிற்கு நுழைந்தது ஒரு விபத்து தான். நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் சினிமாவிற்குள் வரவில்லை. நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான சூரியாவுக்கு ஆரம்பத்தில் நடிப்பு என்றால் என்ன என்பது தெரியாது. நடனத்தை பற்றி ஒன்றுமே தெரியாது. யாரிடமும் அதிகமாக பேச மாட்டார். இப்படியான சூழலில் ‘அவன் சினிமாவிற்கு செட் ஆவானா’ என்பதுதான் சிவகுமாரின் ஒரு பயமாக இருந்தது. ஆனால் தொடர்ந்து பல நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து குறிப்பாக காதல் சார்ந்த படங்களில் நடித்து வெகு சீக்கிரமாவே பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகனாக மாறினார் சூர்யா.
ஒரு கட்டத்தில் விஜய் அஜித் இவர்களுக்கு இணையான நடிகராக பார்க்கப்பட்டார். இது சிவக்குமாருக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. இந்த அளவுக்கு சூர்யா நடிப்பாரா என்பது எனக்கு நம்பிக்கையே இல்லை என பல மேடைகளில் அப்போது கூறியிருந்தார். அதிலிருந்து தொடர்ந்து ஹிட் படங்களையே கொடுத்து வந்த சூர்யா தமிழ் சினிமாவின் ஒரு உச்ச நட்சத்திரமாக பார்க்கப்பட்டார். ஆனால் சமீப காலமாக அவருடைய படங்கள் தோல்விகளையே தழுவி வருகிறது. இன்னொரு பக்கம் அவர் மீது அரசியல் சார்ந்த ஒரு போர்வையை போர்த்தி சில கும்பல் அவரை புறக்கணிக்கப்படுவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது.
ஏன் சூர்யாவுக்கு இந்த நிலைமை?ஏன் அவரை தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிற மாதிரி செய்திகள் வருகின்றன என்பது இதுவரை யாருக்குமே தெரியவில்லை. இன்னொரு பக்கம் அவருடைய மனைவியும் நடிகையுமான ஜோதிகா பாலிவுட்டில் கவனம் செலுத்த போய்விட்டார். தமிழ் சினிமா அல்லது தமிழ் ரசிகர்களை பொறுத்த வரைக்கும் ஹிந்தியை ஒரு எதிரியாகவே பார்க்கிறார்கள். இதில் ஜோதிகா பாலிவுட் பக்கம் சென்றதால் சூர்யாவின் மீது வெறுப்பை கக்குவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்றும் ஒரு கருத்து இருக்கிறது.
இந்த நிலையில் அவருடைய நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன திரைப்படம் ரெட்ரோ. பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. எதிர்பார்த்த அளவு வசூலையும் வெற்றியையும் தரவில்லை. அதற்கு முன் வெளியான கங்குவா திரைப்படம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் அந்த படத்திற்கு அவர் போட்ட உழைப்பு இரண்டு வருட காலம். ஆனால் அது மிகப்பெரிய தோல்வியாக மாறியது. இந்த நிலையில் சூர்யாவின் இந்த தொடர் தோல்விக்கு காரணம் என்ன என்பதை பற்றி திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அவருடைய பதிவில் கூறி இருக்கிறார். இதோ அவர் கூறியது.
16 வருடங்களாக தொடர் தோல்விகளை தந்து வரும் சூர்யா அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக அவர் கடைசியாக தந்த ஹிட் படம் சிங்கம். 2009 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு இன்று வரை அவர் சரியான கதையை தேர்ந்தெடுக்க தெரியாமல் தோற்றுக் கொண்டே வருகிறார். இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் புதிய இயக்குனர்களுக்கு அவர் வாய்ப்பு தராமல் இருப்பதே ஆகும். ஏற்கனவே ஜெயித்த இயக்குனர்கள் மீது சவாரி செய்தால் வெற்றி உறுதி என நம்புகிறார் சூர்யா. அவர்கள் அனைவரும் சொல்லி வைத்தார் போல் சூர்யாவுக்கு விபூதி அடித்து வருகிறார்கள். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் ஓடாத படத்திற்கு சக்சஸ் மீட் கொண்டாடி ஏமாற்றினார்கள்.
அதை நம்பி கார்த்திக் சுப்பராஜுக்கு வாய்ப்பு தந்தார் சூர்யா. அதன் விளைவு ரெட்ரோ பணால் ஆகிவிட்டது. சிங்கத்திற்கு பிறகு ஒரே ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கூட தர முடியாமல் 16 வருடங்களாக அவருடைய தோல்வி பயணம் தொடர்ந்து கொண்டே வருகிறது. அடுத்து ஆர் ஜே பாலாஜியின் மாசாணி அம்மன் கதை இவருக்கு கை கொடுக்குமா என தெரியவில்லை. தமிழ் ரசிகர்கள் உஷாராக இருப்பதை மிகத் தாமதமாக உணர்ந்த சூர்யா அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். அது என்ன ஆகுமோ. இனியாவது உருப்படியான கதைகளை தேர்வு செய்ய வேண்டும்.

புதிய இயக்குனர்களை நம்ப வேண்டும். பழைய டபாரா செட்டுகளை மட்டுமே நம்பினால் விபூதி அடித்துக்கொண்டு தான் இருப்பார்கள். திரையில் இவரை பார்க்கும்போது கதாபாத்திரமாக தெரியாமல் சூர்யாவாக மட்டுமே தெரிவது பெரிய மைனஸ். இந்த செயற்கை தனத்தையும் சரி செய்ய வேண்டும். பிதாமகன், காக்க காக்க போன்ற நம்பகத்தன்மை கொண்ட மாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்ய வேண்டும் சூர்யா என ப்ளூ சட்டை மாறன் அவருடைய பதிவில் வெளியிட்டு இருக்கிறார்.
The post பழைய டபார செட்டுகளை நம்பினால் கடைசியில் விபூதிதான்! சூர்யாவுக்காக பரிதாபப்படும் ப்ளூ சட்டை first appeared on Cinereporters.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


