Siragadikka Aasai: விஜயாவை கதறவிட்ட மனோஜ்… தேவைதான் நல்லா வேணும்… ரோகிணியின் வெற்றி!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
அண்ணாமலை கையில் இருக்கும் தாயத்தை கழட்ட சொல்ல முத்து அதெல்லாம் முடியாது. அப்பா நல்லா இருக்கணும். அதுனால கழட்ட முடியாது என்கிறார். உடனே விஜயா, இது மனோஜுக்கு குழந்தை பிறக்க வாங்கி வந்ததாக கூறுகிறார். முத்துவும் கழற்றி தருகிறார்.
மனோஜை ரூமிற்குள் அழைத்து செல்லும் விஜயா இனி நீ நல்லா இருக்கணும். அதுக்காக தான் வேண்டி வாங்கி வந்ததாக தாயத்தை கட்டி விடுகிறார். அப்போ அந்த நேரத்தில் ரோகிணி வந்து மனோஜிடம் உன் பிசினஸில் நீ பெரிய ஆளா வரணும் அதுக்கு தான் இந்த தாயத்து என்கிறார்.
இருவரும் கையில் மனோஜிடம் தாயத்தை கட்டிவிடுகின்றனர். ஹாலில் இருக்கும் முத்து எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு எனக் கேட்க மீனா என்ன விஷயம் என்கிறார். பார்லர் அம்மா மேல கடுப்பில் இருக்காங்க அம்மா. அதனால இப்போ இப்படி வேண்டி இருப்பாங்க என்கிறார்.

முருகனை அழைத்து கொண்டு முத்து வர அதே வீட்டுக்கு மீனாவுடன் வருகிறார் வித்யா. நீங்களா, நீங்களா என கேட்டுக்கொள்ள முத்து இந்த வித்யா வேண்டாம் எனக் கூற பிரண்ட்டை பத்தி தெரிஞ்சிக்கிட்டா ஒருத்தங்களை தெரிஞ்சிக்கலாம். அப்படி பார்த்தா இவ பிரண்டு சரியான பிராடு. இது வேணாம் என்கிறார்.
மீனா அவரை அடக்கி இவர் மட்டும் என்னை பெண் கேட்க வரலையா என்கிறார். ஒரு கட்டத்தில் சமாதானம் செய்து வித்யா மற்றும் முருகன் கல்யாணம் பண்ணிக்கலாம் என சம்மதம் தெரிவிக்கின்றனர். மறுபக்கம் ரோகிணி ஐயர்ன் பாக்ஸ் ஆன் செய்து விட்டு போகிறார்.
அப்போ வரும் மனோஜ் தெரியாமல் கைவைத்து விட சுட்டுக்கொள்கிறார். ரோகிணி வந்து என்னாச்சு எனக் கேட்க சுட்டுக்கொண்டேன் எனக் கூற அறிவிருக்கா? ஆன் பண்ணி வச்சத போய் சுட்டுக்குற எனத் திட்டிக்கொண்டு இருக்கிறார்.
அந்த நேரத்தில் விஜயா வந்து ரோகிணியை திட்டப்போக அவரை மனோஜ் திட்டி அனுப்பி விடுகிறார். இதை பார்க்கும் ரோகிணி சந்தோஷப்படுகிறார். ஹாலுக்கு வரும் விஜயா உட்கார்ந்து அழுக எல்லாரும் என்னாச்சு எனக் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் மனோஜ் என்னை வெளியில் போக சொல்லிட்டான் எனச் சொல்ல எல்லாரும் கடுப்பாகி விடுகின்றனர்.
The post Siragadikka Aasai: விஜயாவை கதறவிட்ட மனோஜ்… தேவைதான் நல்லா வேணும்… ரோகிணியின் வெற்றி! first appeared on Cinereporters.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


