கோலிவுட் அம்பானியே இவர்தான்!.. மகள் திருமணத்தை பிரம்மாண்டமா நடத்தும் ஐசரி கணேஷ்!…

Isari Ganesh: திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. மகளின் திருமணத்திற்காக ஈசிஆரில் பிரார்த்தனா தியேட்டர் என்ற ஒரு திரையரங்கு இருந்தது. அதை இடித்துவிட்டு இப்போது ஒரு பில்டிங் கட்டப் போகிறார்களாம். அது கிட்டத்தட்ட 30 ஏக்கர் நிலம். அந்த இடத்தை ஐசரி கணேஷ் லீசுக்கு எடுத்து முப்பது கோடி செலவில் மண்டபம் மாதிரி ஒரு செட்டு போட்டு இருக்கிறாராம்.

அதற்கு காரணம் அதே ரோட்டில் ஆர்கே கன்வென்ஷனல் செண்டர் என்ற ஒரு மண்டபம் இருக்கிறதாம் .அங்கு தான் முகூர்த்தம் வைத்திருக்கிறார்கள். ஆனால் ரிசப்ஷனை இவர் செட்டு போடும் மண்டபத்தில் வைத்திருக்கிறாரம்.இதற்கு இன்னொரு காரணம் என்னவெனில் இவருடைய கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 8,000 ஸ்டாஃப் வேலை பார்க்கிறார்களாம். அது போக திருமணத்திற்கு அழைப்பவர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பேர் இந்த திருமணத்திற்கு வர வாய்ப்பு இருக்கிறதாம்.

இத்தனை பேரும் வரவேண்டும் என்றால் அந்த ஒரு இடம் பத்தாது. அதனால் தான் இவ்வளவு பெரிய செலவில் ஒரு செட்டு போட்டு இருக்கிறாராம் ஐசரி கணேஷ். அதற்கு அடுத்தபடியாக திருமணம் ஆர்கே கன்வென்ஷனல் சென்டரில், ரிசப்ஷன் இவர் போட்ட செட்டில். இன்னொரு பக்கம் அதே ஆர்கே கன்வென்ஷனல் சென்டரில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இருந்து பல பேர் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு அங்கு விருந்து கொடுக்கிறாராம்.

இதோடு திருமணம் முடிந்ததா என்றால் இல்லை. இவருடைய மகள் விருப்பத்திற்கு இணங்க மூன்று நாள் 250 பேரை அழைத்துக் கொண்டு மாலத்தீவுக்கு செல்ல இருக்கிறார்களாம். டெஸ்டினேஷன் வெட்டிங் என்ற ஒரு வார்த்தை சமீபகாலமாக பயங்கர ட்ரெண்டிங்காக இருக்கின்றது. அதாவது இங்கு உள்ளவர்கள் வெளிநாடுகளில் சென்று அங்கு திருமணத்தை வைத்து அந்த ஊருக்கு ஏற்ப வைப் செய்வதுதான் இந்த டெஸ்டினேஷன் வெட்டிங் .

ஐசரி கணேசின் மகள் அப்படிப்பட்ட ஒரு திருமணத்தை தான் எதிர்பார்த்து இருந்தாராம். ஆனால் ஐசரி கணேஷின் பழக்கம், நண்பர்கள் என இங்குதான் அதிகம். அதனால் திருமணத்தை இங்கே வைத்துவிட்டு மகளின் ஆசைக்காக அங்கேயும் டெஸ்டினேஷன் வெட்டிங் என்ற ஒரு திருமணத்தையும் நடத்த இருக்கிறாராம். இதில் 150 பேர் குடும்ப உறுப்பினர்கள் 100 பேர் நண்பர்கள் என மொத்தமாக 250 பேரை கூட்டிக்கொண்டு சார்ட்டட் விமானத்தில் மாலத்தீவுக்கு செல்ல இருக்கிறாராம் ஐசரி கணேஷ்.

இதை பார்க்கும் பொழுது மும்பையில் அம்பானி என்றால் சென்னையில் ஐசரி கணேஷ் என கூறி வருகிறார்கள். இதற்கு மத்தியில் எத்தனையோ பேர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தன்னுடைய அன்றாட வாழ்வாதாரத்தையே இலக்கும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். அப்படி இருக்கிறவர்களுக்கு இந்த அளவு திருமணத்திற்கு ஆகும் செலவில் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்து கூட உதவலாமே என வழக்கம்போல நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.