4 ஆயிரம் ரன் குவித்து ஜாஸ் பட்லர் சாதனை!
அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் போது குஜராத் அணியின் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லர் 12 ரன்களை கடந்த போது ஐபிஎல் தொடர்களில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த சாதனையை அவர், தனது 117-வது ஆட்டத்தில் நிகழ்த்தி உள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் 4 ஆயிரம் ரன்களை எட்டும் முதல் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் ஆவார். மேலும் குறைந்த பந்துகளில் 4 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்களில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளார் ஜாஸ் பட்லர். அவர், 2,677 பந்துகளில் 4 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். இந்த வகை சாதனையில் கிறிஸ் கெய்ல் (2,653), ஏபி டி வில்லியர்ஸ் (2,658) முதல் இரு இடங்களில் உள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


