Dayangaram:என்னப்பா இது டைட்டிலே புரியல!.. விஜே சித்து பிரதீப்புக்கே டஃப் கொடுப்பாரு போல.. டிராகன் போல டயங்கரம்!

Dayangaram: தமிழ் சினிமாவில் யூட்யூப்பர்கள் மோகம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த பிரபலம் தற்போது கோலிவுட்டிற்குள் ஹீரோவாக காலடி எடுத்து வைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தற்போதைய காலத்தில் டிஜிட்டல் மையம் அதிகமாகி வரும் நிலையில் சமூகவலைதளத்தில் பிரபலமாக இருக்கும் பலரும் தமிழ் சினிமாவை நோக்கி நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். பிரபலத்தை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூட ஒரு படத்தை இயக்கி இருந்தார்.

பிளாக்‌ஷீப் டீம் கூட சிவகார்த்திகேயன் தயாரித்த படத்தினை இயக்கியது. தொடர்ந்து பிரபல யூட்யூப் சேனலான பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் கூட படம் இயக்கினர். ஆனால் அப்படம் வெளிவராமலே முடங்கியது. அதற்காக அவர்கள் பணம் திரட்டியது கூட விமர்சிக்கப்பட்டது.

சமீபத்தில் கூட பிரபலமாக இருந்த ஜம்ப்கட் ஹரிபாஸ்கர் நடித்த மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த லிஸ்டில் இணைந்திருக்கிறார் விஜே சித்து.

இவர் இயக்கி ஹீரோவாக நடிக்க இருக்கும் டயங்கரம் படத்தின் முதற்கட்ட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் அறிவிப்பை தனுஷ் வெளியிட்டு இருக்கிறார்.

4 நிமிடம் ஓடும் அறிவிப்பு வீடியோவில் விஜே சித்துவுடன் இளவரசும் இணைந்து இருக்கிறார். அப்பாவாகவும் அவர் நடித்து இருக்கிறார். தன்னுடைய டீமையும் இணைத்து அக்மார்க் அவர் விலாக் ஸ்டைலில் அறிவிக்கப்பட்டு இருக்கும் வீடியோ தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.