விராட் கோலி விரும்பி கேட்கும் பாடல்.. சிம்புவின் அந்த பாடலா? கரெக்ட் சாய்ஸ்தான்

Simbu: தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. தற்போது கமலுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படம் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. அந்தப் படத்தை தொடர்ந்து சிம்புவின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பார்க்கிங் பட இயக்குனருடன் அவருடைய 49 வது படத்தை ஆரம்பிக்க இருக்கிறார் சிம்பு.

அதனை எடுத்து தேசிங்கு பெரிய சாமியுடன் இணைந்து ஐம்பதாவது படமும் அஸ்வத் மாரிமுத்து உடன் இணைந்து 51 வது படத்தையும் தொடர்வார் சிம்பு. இனிவரும் காலங்களில் சிம்புவின் பெயரை தான் அனைவரும் உச்சரிக்கக்கூடும். அந்த வகையில் அவருடைய அடுத்தடுத்த அப்டேட்டுகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் ஒரே காரணம் மாநாடு திரைப்படம். அதற்கு முன்பு வரை அவருடைய படங்கள் சரியாக போகவில்லை.

மாநாடு திரைப்படம் தான் அவருக்கு ஒரு நல்ல கம்பேக்கை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து நல்ல ஒரு கேரக்டர் வாய்ந்த திரைப்படத்தில் நடித்தார். வெந்து தணிந்தது காடு, 10 தல ஆகிய திரைப்படங்கள் அவருடைய நடிப்புக்கு தீனி போட்ட படங்களாக அமைந்தன .அதன் பிறகு தான் அடுத்தடுத்து அவருடைய அப்டேட்டுகள் அதிகரிக்க தொடங்கியது. இன்னொரு பக்கம் தன்னுடைய உடல் நலன் மீதும் அதிக அக்கறை கொண்டவராக இருக்கிறார் .

உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு அவருடைய ரசிகர்களுக்கு ஒரு தூண்டுகோலாக இருந்து வருகிறார் சிம்பு .எப்பொழுதுமே ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை என்று தான் அவர் அடிக்கடி சொல்வது .அந்த அளவுக்கு ரசிகர்களின் மீது அதிக அன்பை கொண்டவர் சிம்பு. இந்த நிலையில் அவர் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்திருக்கிறார்.

அதில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அதிகம் விரும்பி கேட்கும் பாடலாக சிம்புவின் பாடலை தான் குறிப்பிட்டு இருக்கிறார் .அந்த ஒரு வீடியோவை பகிர்ந்து சிம்பு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். பத்துதல படத்தில் இருக்கும் சுற்றி நின்று ஊரே என்ற பாடல் தான் விராட் கோலிக்கு மிகவும் ஃபேவரைட் ஆன பாடலாம். இதை அவருடைய ஸ்டோரில் பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.