‘என்டிஆர் 31’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் இணையும் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து கவனம் செலுத்தி வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
தற்போது இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 25-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. ஜூனியர் என்.டி.ஆர் பிறந்த நாளன்று இப்படத்தின் தலைப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இதற்கு ‘டிராகன்’ எனத் தலைப்பிட்டு இருக்கிறார்கள். இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


